பங்கு சந்தை : வாங்க பழகலாம்
பங்கு சந்தையில் முதலீடு செய்வது என்று முடிவு செய்தாகிவிட்டது.
எங்கு இருந்து ஆரம்பிப்பது . என்ன தேவைகள் . ஒரு பார்வை. முதலில் முடிவு செய்ய வேண்டியது ஒரு மெம்பெர் , அதாவது, சாதாரண மனிதனின் வார்த்தையில் சொல்வது என்றல் “ஸ்டாக் புரோக்கர் “ , ஒருவரிடம் டீமேட் மற்றும் டிரேடிங் அக்கௌன்ட் ஆரம்பிக்க வேண்டும்.
இந்தியாவில் தற்போதய நிலைப்படி NSE (தேசிய பங்கு சந்தை ) , B S E (பம்பாய் பங்கு சந்தை, ), M C X (மல்டி கமோடிட்டி EXCHANGE )என்ற மூன்று சந்தைகள் உள்ளன இவற்றில் mcx பெருன்பான்மையாக கம்மோடிட்டி (தங்கம், வெள்ளி , கச்சா எண்ணெய் மற்றும் பல விவசாய பொருட்கள் ) ஆகியவற்றில் trade (வியாபாரம் ) நடக்கிறது.
தேசிய பங்கு சந்தை மற்றும் மும்பை பங்கு சந்தை இரண்டுமே மும்பையை தலைமையிடமாக கொண்டு இயங்குகிறது MCX உம் மும்பையை தலைமையிடமாக கொண்டே இயங்குகிறது.
இந்த சந்தைகளின் கீழ் புரோக்கர் மற்றும் subbroker வருகிறார்கள். இந்த ஸ்டாக் ப்ரோக்கர்களில் நான்கு வகையினர் உள்ளனர்
முழு சேவை தருபவர்கள்.
இவர்களிடம் அக்கௌன்ட் ஓபன் பண்ணினால், ஆஃப் போன்ற சாப்ட்வேர் தருவதோடு, ரெசெர்ச் மற்றும் advisory என்று சொல்ல கூடிய சேவையையும் சேர்த்து தருவார். இது கம்பெனி மற்றும் பொருளாதாரம் பற்றிய விவரங்களை விரும்பக்கூடியவர்களுக்கு, அது பற்றி அறிய ஆவலாக உள்ளவர்களுக்கும் பெரிதும் உதவும். நாம் முதலீடு செய்ய கூடிய தொகையை பொறுத்து relationship மேனேஜர் கிடைக்கும். இது ஒரு வழிகாட்டுதல் கிடைக்க உதவியாக இருக்கும் .
மோதிலால் ஓஸ்வால் , geojit , போன்ற நிறுவனங்கள் இதில் அடங்கும்
டிஸ்கோவுண்ட் brokers
இவர்களிடம் அக்கௌன்ட் ஓபன் பண்ணும் பொழுது, இவர்கள் வெறும் சாப்ட்வேர் மற்றும் தருகின்றனர். சில முதலீட்டார்கள் தங்களுக்கு இருக்கும் அனுபாவதின்க் கீழ் தாங்களாகவே ஆராய்ந்து தங்களாவே முடிவு எடுக்க முடியும் பொழுது இவர்களிடம் அக்கௌன்ட் ஓபன் செய்கின்றனர் .
Zerodha போன்ற நிறுவனங்கள் இதில் அடங்கும்
வங்கி சார்ந்த ப்ரோக்கர்கள்
இவர்கள் பிரதான தொழில் வங்கி ஆகும் அவர்களின் துணை நிறுவனங்கள் மூலம் அவர்கள் ஸ்டாக் ப்ரோகிங் சேவையை தருகின்றனர் பொதுவாக இவர்கள் வங்கி கணக்கு அதோடு இணைந்த ப்ரோகிங் சேவையை அளிக்கின்றனர். இவர்களும் ரெசெர்ச் சேவைகள் அளிப்பது உண்டு .
கோடக், icici securities போன்றவை இதில் அடங்கும்
Foreign companies
சில வெளி நட்டு நிதி நிறுவனங்கள் இங்கு ஒரு அலுவலகம் அமைத்து தங்களது சேவைகளை பெரிய நிதி நிறுவங்களுக்கும் பெரும் முதலீட்டாளர்களுக்கும் வழங்கி வருகின்றன.
Morgan Stanley , CLSA , Credit Suisse போன்றவை இதில் அடங்கும்
நிற்க. ஒவ்வோரு அமைப்பிலும் சில நல்லதும் சில தொந்தரவுகளும் உண்டு.
ஒரு முதலீட்டாளர் அவரே கற்க முயன்று முடிவு எடுப்பது மிகவும் நல்லதாகும்.
ஒரு முடிவு எடுத்து ஒருவரிடம் ஒரு டீமேட் அக்கௌன்ட் மற்றும் டிரேடிங் அக்கௌன்ட் ஓபன் பண்ணுவது முதல் படி.
அடுத்து டீ மேட் அக்கௌன்ட்க்கும் டிரேடிங் அக்கௌன்ட் இர்க்கும் உள்ள வித்தியாசம் பாப்போம்
டிரேடிங் அக்கௌன்ட் என்பது பங்கு சந்தைக்கும், புரோக்கர் மற்றும் வாடிக்கையாளர் (client ) க்கும் உள்ள ஒப்பந்தம் ஆகும் ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும் UCC (unique client code ) வழங்கப்படும் இந்த எண் மூலம் ஒருவர் சந்தையில் தனது ஆர்டர் பதிவு செய்ய இயலும். இதன் மூலம் பங்கு சந்தைகள் எந்த வாடிக்கையாளர் எந்த புரோக்கர் மூலம் பங்குகள் வாங்க மற்றும் விற்க உத்தரவை பிறப்பிக்கின்றார் என்பது அறியப்படும்.
ஒருவாறு பல ப்ரோகேரிடம் அக்கௌன்ட் ஓபன் பண்ண இயலும். ஆனால் ஒரு புரோக்கர் இடம் ஒரு அக்கௌன்ட் மற்றும் வைத்து கொள்ள இயலும்.
ஒருவர் தனித்தோ அல்லது joint , இன்னும் ஒருத்தரோடு இனைந்து அக்கௌன்ட் பண்ண இயலும். முதல் நபரின் பெயரிலேயே டிரேடிங் அக்கௌன்ட் இருக்கும். டீமேட் அக்கௌன்ட் joint ஆக இருக்கும்
டீமேட் அக்கௌன்ட் என்பது, டிரேடிங் அக்கௌன்ட் மூலம் வாங்கப்பட்ட பங்குகளை பாதுகாப்பாக வைத்து கொள்ள கூடிய ஒரு அக்கௌன்ட். இது நமது வங்கி கணக்கு போன்றது. வங்கியில் பணத்தை வைத்து இருக்கிறவம். டீமேட் அக்கௌன்ட் இல் நாம் வாங்கும் பங்குகள் உள்ளன.
டீமேட் செர்விக்ஸ்ஐ NSDL (national securities depositories ltd )மற்றும் CDSL Central depository Services ltd ) தங்களது அங்கீகரிக்கப்பட்ட உறுப்பினர்கள் மூலம் வழங்குகிறது.
ஒரு பங்கு வர்த்தக புரோக்கர் அல்லது வங்கிகள் இவர்களிடம் அதற்கான உரிமத்தை பெறுகின்றனர்.
பங்கு சந்தைகள் , ஸ்டாக் ப்ரோக்கேர்ஸ் , சப் ப்ரோக்கர்ஸ் , NSDL , CDSL இவை அனைத்தையும் மேற் பார்வை செய்து அவர்களுக்கு வழிகாட்டும் நெறிமுறைகளை மற்றும் முதலீட்டர்களுக்கு தேவையான பாதுகாப்பு முறைகளை உருவாக்கி நடை முறை படுத்தும் பணியை செபி (SEBI ) சேசுரிட்டிஸ் அண்ட் எஸ்ச்ங்கே போர்டு ஆப் இந்தியா செய்து வருகிறது.
இது வங்கிகளுக்கு rbi போன்ற ஒரு அமைப்பு.
தொடர்ந்து பல பதிவுகளை படியுங்கள். உங்கள் கேள்விகளை உங்கள் சந்தேகங்களை எங்களுக்கு அனுப்புங்கள் .